நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மணமகனின் வயது 27 மணமகளின் வயது 65! இப்படியொரு திருமணமா?

உண்மைதான். அண்மையில் ஹரியானாவில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:03 pm

ராக்கி

உண்மைதான். அண்மையில் ஹரியானாவில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம். 65 வயதான அமெரிக்கப் பெண் கரென் லிலியன் எப்னர் (Karen Lilian Ebner) என்பவருக்கும் 27 வயதான இந்தியர் பிரவீணுக்கும் தான் இந்தத் திருமணம் நடந்தது. காதலுக்கு கண் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லையே இல்லை என்று உணர்த்தியுள்ளனர் இந்த ஜோடி.

இது எப்படி சாத்தியமாகியது என்று தோன்றுகிறதா? பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில்தான் இவர்கள் எட்டு மாதத்துக்கு முன்பு நட்பாகி பேசத் தொடங்கியிருக்கின்றனர். விடியோ சேட்டில் தொடங்கிய அந்த நட்பு, குறுகிய காலத்தில் காதலாக மலர, தற்போது திருமணம் வரை வளர்ந்துள்ளது. வயது உட்பட எல்லா எல்லைகளையும் கடந்த இந்தக் காதல் திருமணம் ஜூன் 21-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது.

தன்னுடைய உறவினர்களின் சம்மதம் பெற்ற பின் கரென் இந்தியாவுக்கு பறந்து வந்து பிரவீணைக் கரம் பிடித்துள்ளார். இந்தத் தம்பதியர் தற்போது ஒரு வாடகை அடுக்குமாடி கட்டடத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். ஜூலை 18-ம் தேதி கரென் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும். எம்.ஏ. சரித்திரம் படித்துள்ள ப்ரவீண் சரியான வேலை கிடைக்காததால் தினக்கூலி வேலை செய்துவருகிறார். அமெரிக்கா செல்ல டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பிரவீணுக்கு விசா கிடைக்கவில்லை என்றால் காரென் நிரந்தரமாக இந்தியாவில் குடியுரிமை பெற்று தங்கிவிடப் போவதாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.