பஞ்குல்லா: பஞ்சாபில் திருமணமான 22 வயது இளம்பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு நான்கு நாட்கள் நாற்பது பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:
சண்டிகாரின் மோர்னி ஹில்ஸ் பகுதியில் உள்ள கைம்ப்வலா கிராமத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதி ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு தையல் தொழில் செய்து வரும் ஒருவரின் மனைவிதான் குறிப்பிட்ட அந்த இளம்பெண் (22). விடுதி உரிமையாளர் சன்னி, அந்த இளம்பெண்னின் கணவருக்கு தெரிந்தவர். விடுதியில் சுத்தம் செய்யும் வேலையை அந்தப் பெண்ணுக்கு தருவதாக கூறியதால், கடந்த 15-ஆம் தேதி விடுதிக்குச் சென்று சன்னியைச் சந்திக்க கணவர் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி சந்திக்க வந்த பெண்ணை சன்னி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அவரை அங்கிருந்த அறை ஒன்றில் அடைத்து வைத்து தொடர்ந்து நான்கு நாட்கள் சன்னியின் நண்பர்கள் உள்ளிட்ட 40 பேர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவரது அலைபேசியையும் அவர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டதால் அவரால் தன் கணவருக்கும் தகவல் எதுவுமளிக்க இயலவில்லை.
பின்னர் ஒருவழியாக கடந்த 18-ஆம் தேதியன்று அங்கிருந்து எப்படியோ தப்பி வந்தவர் கணவருடன் சேர்ந்து ஹரியானாவின் பஞ்குல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் அங்கு புகாரினை பெற மறுத்ததால், அவர் சண்டிகாரின் மணி மஜ்ரா காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் விசாரணை செய்த போலீசார் விடுதி உரிமையாளர் சன்னி உட்பட இருவரை கைது செய்துள்ளனர். அத்துடன் வழக்கானது மீண்டும் உரிய அறிவுறுத்தலின் படி பஞ்குல்லா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


