குடியரசு தின நிகழ்ச்சியில் ஆசியான் கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்பு
குடியரசு தின நிகழ்ச்சியில் முதன்முறையாக ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


நாடு முழுவதும் 69-ஆவது குடியரசு தினம் ஜனவரி 26, 2018 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதன்முறையாக ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுவரை நடைபெற்று வந்த குடியரசு தின நிகழ்ச்சியில் ஒரு நாட்டைச் சேர்ந்த தலைவர் மட்டுமே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் இம்முறை குடியரசு தின நிகழ்ச்சியில் முதன்முறையாக ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
1967-ம் ஆண்டு துவக்கப்பட்ட ஆசியான் கூட்டமைப்பில் மியான்மர், ப்ரூணி, கம்போடியா, ஃபிலிஃபைன்ஸ், இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவுடனான 4-ஆவது மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஆகும்.
இந்நிலையில், இந்திய - ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பின் 25-ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தில்லியில் இன்று தொடங்கி 2 தினங்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து இந்த நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர். இதில் கடல்சார் பாதுகாப்பு, வணிகம் மற்றும் கூட்டமைப்பு உள்ளிடவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
மேலும், இதனை சிறப்பிக்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...