மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, கனடா இணைந்து செயல்படும்: பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, கனடா இணைந்து செயல்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:19 pm

Raghavendran

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி, 3 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு 7 நாள் பயணமாக பிப்ரவரி 17-ஆம் தேதி வருகை தந்தார். பின்னர் தாஜ்மகால், காந்தி ஆசிரமம், தங்க கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்றார். பின்னர் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளின் இடையே பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் நிலவும் உறவை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவும், கனடாவும் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும். ஏனெனில் இந்தியா மற்றும் கனடா பயங்கரவாத செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சந்திப்பின் மூலம் அதனை ஒழிக்கும் விதமாக செயல்படுவது தொடர்பாக ஒற்றுமையுடன் செயல்பட ஆலோசித்தோம். யாராவது தங்களின் அரசியல் லாபத்துக்காக மதத்தின் பெயரால் இந்த சமூகத்தில் பயங்கரவாதத்தை பரப்ப நினைத்தால் அது முறியடிக்கப்படும்.

இரு நாடுகளின் இடையே பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இருநாடுகளின் உறவும் பிரகாசமாக அமையும். உலகளவில் எரிசக்தி உற்பத்தியில் கனடா முதன்மையான நாடாக திகழ்கிறது.

தற்போது இந்தியாவுக்கு எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே அதனை பூர்த்தி செய்யும் விதமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல உயர்கல்விக்காக இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பும் நாடாகவும் கனடா உள்ளது. இங்கு சுமார் 1,20,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உயர்கல்வி தொடர்பாகவும் சில ஒப்பந்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.