2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை ஜோர்டான் சென்றடைந்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:12 pm

Raghavendran

அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய மூன்று நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடி, ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்துப் பேசுகிறார்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை பாலஸ்தீனம் செல்லும் மோடி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ரம்மல்லா நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது இருநாடுகளுக்கு இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிப்ரவரி 10-ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.