மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: மனைவி கொல்லப்பட்ட அதே இடத்தில் கணவரின் சடலம்

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த அதே இடத்தில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2018, 7:06 am


மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த அதே இடத்தில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் வயல் வெளியில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதை அவ்வூர் மக்கள் பார்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் அவர் 22 வயது ஸ்ரீஷைல் சனப்பா பிராஜ்தார் என்பது தெரிய வந்தது. இதே இடத்தில்தான் கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி அனுராதா பிராஜ்தார் அவரது பெற்றோரால் ஆணவக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீஷைல் சனப்பா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே இந்த விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

அனுராதாவின் தந்தை வைத்திருந்த பண்ணையில், ஸ்ரீஷைல் சனப்பாவின் தந்தை கூலி வேலை செய்து வந்துள்ளா. தந்தையைப் பார்க்கச் செல்லும் ஸ்ரீஷைல், எம்பிபிஎஸ் படித்து வந்த அனுராதா மீது காதல் கொண்டு, அக்டோபர் 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அனுராதா கடந்த அக்டோபர் 4ம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அனுராதாவின் தந்தையும், வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.