மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த வேண்டிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை நிராகரித்தது.
மாநிலங்களவைத் தேர்தலிலும் நோட்டா (யாருக்கும் வாக்கில்லை) எனும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா இடம்பெற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில்,
நோட்டா என்பது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நல்வாய்ப்பு. ஆனால் மாநிலங்களவைத் தேர்தல் என்பது வேறு. அதில் நோட்டா இடம்பெறுவதன் மூலம் குதிரை பேரம் அதிகரிக்கும், ஜனநாயகம் படுகொலை செய்யப்படும். இதனால் ஊழலும், சச்சரவுகளும் அதிகரிக்கும். எனவே மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த தடை விதிக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


