கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாலை போக்குவரத்துகள் தற்போது சீரடைந்து வருவதால் பேருந்துகள் சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
கேரள மாநிலம் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல இடங்களில் சாலை, விமான மற்றும் ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வற்றியதால் அங்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்மூலம், கோழிக்கோட்டில் இருந்து முக்கம், மவூர், கக்கோடி, பலுசேரி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வயநாடு, மலப்புரம், பாலக்காடு(மஞ்சேரி - பெரிந்தல்மன்னா வழி) மற்றும் திரிச்சூர்(அத்திக்காவு - வடக்காஞ்சேரி வழி) ஆகிய மாவட்டங்களுக்கும் சனிக்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
"கோழிக்கோட்டில் உள்ள பிற நகரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு முடிந்த அளவுக்கு பேருந்துகளை இயக்க முயற்சி செய்து வருகிறோம். திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பேருந்து இயக்க அமைப்பின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையும் அரசு அலுவலகங்கள்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் யு.வி. ஜோஸ் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் பணியில் இருக்கின்றனரா என்பதை உறுதிசெய்யுமாறும் துறை தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


