புது தில்லி: ஊழல், பிரிவினை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை மோடி அரசில உச்ச கட்டத்தில் இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் கலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசில் ஊழல், மக்களிடையே பிரிவினை உண்டாக்குதல், திறமையின்மை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை உச்ச கட்டத்தில் இருக்கின்றன.
ஆளும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு கோப அலை காணப்படுகிறது. எனவே நமது கட்சி எம்.பிக்கள் கடுமையாக உழைத்து, பொதுமக்களுக்கு 'நல்ல நாள்' விரைவில் வருமென்ற மோடியின் பொய் உறுதிமொழிக்கு ஒரு நல்ல மாற்று தர வேண்டும்.
ஜனநாயாகம் மற்றும் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை ஊக்குவிக்கும் கட்சிகளுக்குமிடையேயான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய பெரும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது.
அரசியலமைப்பின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் வெறுப்பு, பிரிவினை மற்றும் வன்முறை சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


