நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர்: சித்தராமையா

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் முதன்முதலில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:47 pm

Raghavendran

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் முதன்முதலில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த தத்துவவாதி பாஸவண்ணாவுக்கு புதன்கிழமை ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பாஸவேஷ்வரா சிலைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர்தூவி மரியாதை செலுத்த அனுமதிக்கக் கூடாது என்று கர்நடாக மாநில பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகே செவ்வாய்கிழமை தெரிவித்தார். மேலும் அவருக்கு பாஸவேஷ்வரா ஜெயந்தி கொண்டாடும் அருகதை இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பாஸவேஷ்வரா ஒன்றும் பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகேவினுடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அவரை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். இதை செய்யக் கூடாது என்று காங்கிரஸுக்கு உத்தரவிட அவர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் நடைபெற்ற பாஸவண்ணா ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஸவேஷ்வரா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பாஸவாவினுடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் பாஸவண்ணா தான் வித்திட்டவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.