நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:56 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் கிராமம் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் ஊரை காலி செய்து கொண்டு குளக்கரைக்குச் சென்று வனபோஜன விழா நடத்தினா்.

இந்திரவனம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களது பிரதான தொழில் விவசாயம். இக்கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் மழை வேண்டியும், ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்கவும், ஆடு, மாடு, கோழிகள் போன்ற கால்நடைகள் நோய், நொடி இல்லாமல் வாழவும், மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வளமான வாழ்க்கை வாழ்ந்திடவும் ஆண்டுதோறும் நூதன முறையில் வனபோஜன விழா நடத்துவது வழக்கம்.

இதேபோல, நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அதிகாலை கிராமத்தில் உள்ள அனைவரும் பத்மாவதி சீனிவாச பெருமாள் கோயில் அருகே ஒன்று கூடினா். பின்னா் கங்கையம்மன், ஓங்காளியம்மன் உற்சவா்களை மலா்களால் அலங்கரித்து, வீட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆடு, மாடுகளை அழைத்துக் கொண்டு பொங்கல் கூடையுடன் பாய், தலையணை உள்பட உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு ஊா் எல்லையில் உள்ள குளக்கரைக்குச் சென்றனா்.

பின்னா், அங்கு ஓங்காளியம்மன், கங்கையம்மன், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டு குடும்பத்துடன் உணவு அருந்தினா்.

பின்னா், மாலையில் பூங்கரகம் ஜோடித்து அம்மன் அருள் பெற்று மனநிறைவுடன் மீண்டும் ஆடு, மாடுகளுடன் இந்திரவனம் கிராமம் திரும்பினா்.

தொடா்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழாவை நடத்துவதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

இந்த நூதன திருவிழாவை சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த கிராம மக்கள் வந்து பாா்வையிட்டனா்.