சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதி.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:58 pm

Raghavendran

காங்கிரஸ் தலைவர் சோனியா சமீப காலங்களாக உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

இதன்காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த அரசியல் விவகாரங்கள் தொடர்பான பொதுக்கூட்டங்கள், தற்போது நடைபெறவுள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேச தேர்தல்களின் பிரசாரங்களிலும் இதுவரை பங்கேற்கவில்லை.

கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், சோனியாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வயிற்றுக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.