புதுதில்லி: அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகளை முறைகேடாக வளைத்து பாஜக திருடியுள்ளது என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்த பெரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்த போதிலும் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான அளவு தனிப்பெரும்பான்மை கிடைக்கவேயில்லை.
இந்நிலையில் இந்த இரு மாநிலங்ககளிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. கோவா முதலமைச்சராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்க உள்ளார். மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது.
பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'தேர்தலில் இரண்டாவதாக வந்த ஒருகட்சிக்கு ஆட்சியமைக்க எந்த உரிமையும் இல்லை. இத்தகைய தனது செயல்பாடுகளினால் தேர்தல் முடிவுகளை முறைகேடாக வளைத்து பாஜக திருடியுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ' மக்கள் சக்தியை பணத்தின் சக்தி வென்றுள்ளது. கோவாவில் ஆட்சியமைக்க தேவையான அளவு ஆதரவு திரட்ட முடியாமைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


