ராய்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸல்கள் நடத்திய கடும் துப்பாக்கிச் சூட்டில் 11 வீரர்கள் பலியாகினர்.
சட்டீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்று. அங்கே புதிதாக உருவாக்கப்பட்டு வரும் இங்ரம் -பெஜ்ஜி சாலையில் நடைபெறும் சாலை பணிகளை கவனித்து பாதுகாப்பு கொடுப்பதற்காக சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய தனி அணி ஒன்று உள்ளது. 219-ஆவது பட்டாலியனைச் சேர்ந்த இந்த வீரர்கள் அடங்கிய அணியானது இன்று காலை 09.15 மணி அளவில் கொட்டச்செரு கிராமம் அருகில் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வரிசையாக சிறிய அளவிலான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து வீரர்களின் கவனத்தை நிலைகுலையச் செய்த நக்ஸலைட்டுக்கள் பின்னர் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாறுமாறாக சுடத் தொடங்கினர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5 பேர்க படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக விமானம் மூலம் பெஜ்ஜியில் உள்ள சி.ஆர்.பி.எப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கூடுதல் படை வீரர்கள் அங்கே அனுப்பப்பட்டு மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டன.
தாக்குதலில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள் பத்து துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ரேடியோ கருவிகளையும் கைப்பற்றிச் சென்று விட்டதாக சி.ஆர்.பி.எப் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


