பஸடென்னா (அமெரிக்கா): சந்திரனைக் குறித்து ஆராய அனுப்பப்பட்டு விண்வெளியில் தொலைந்து போன இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.
நிலவினை குறித்து ஆராய்வதற்காக சந்திரயான் - 1 என்னும் விண்கலத்தை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஏவியது. நிலவினைக் தொலைவு உணர்வு முறையில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆராய்வதற்காகவும், வேறுபட்ட தொலை நிலைகளில் புகைப்படங்கள் எடுத்து நிலவு பற்றிய ஒரு முப்பரிமான வரைபடம் ஒன்றை உருவாக்குவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும்.
ஆனால் சில ஆரம்ப கட்ட தகவல்களுக்குப் பிறகு ஆகஸ்ட்-2009 முதல் சந்திரயானுடனான ரேடியோ தகவல் தொடர்பு முற்றிலும் நின்று போனது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் தன்னுடைய புதிய வகை நில ஆய்வு ரேடார் ஒன்றை பயன்படுத்தி சந்திரனைச் சுற்றி வரும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை கண்டறிந்துள்ளது. அவை அமெரிக்காவின் 'லூனார் ரிகன்னசைன்ஸ் ஆர்பிட்டர்' மற்றும் சந்திரயான் -1 ஆகிய இரண்டுமாகும்.
அளவில் மிகச் சிறியதான இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலத்தை மீண்டும் கண்டறிந்தது ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை நாசாவின் விண்வெளி ஆய்வு மைய ரேடார் விஞ்ஞானி மரீனா ப்ரோசோவிக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


