/

மணிப்பூர் சட்டசபை தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 67% வாக்கு ப்பதிவு!

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.    

News image
Updated On :8 மார்ச் 2017, 8:59 am

இம்பால்: நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.    

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக இரண்டாவதுமற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு ஈன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் விவேக்குமார் தேவாங்கன் தெரிவித்துள்ளார்.          

98 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் முதல்வர் இபோபி சிங் மற்றும் சமூக செயற்பட்டாளர் ஐரோம் ஷர்மிளா ஆகியோர் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.