அகர்தலா: இந்து - முஸ்லீம் ஒற்றுமை குறித்த திரிபுரா மாநில ஆளுநரின் சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று அங்குள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் ஆளுநராக இருப்பவர் டத்கதா ராய். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவரும் இந்த மாநிலத்திற்கு 2015-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி முதல் இவர் ஆளுநராக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பான 'பாரதிய ஜன சங்கத்தினை' தோற்றுவித்தவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, 1946-ஆம் வெளியிட்ட கருத்து ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
'சிவில் யுத்தம் ஒன்று நடக்காமல் இந்தியாவில் இந்து-முஸ்லீம் பிரச்சினை தீராது' என்பதே அந்த கருத்தாகும். அவரது இந்த ட்வீட் வெளியானவுடன் அவருக்கு எதிராக கண்டங்கள் குவியத் தொடங்கின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பிஜன் தார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 'அபாயகரமான இந்த ட்வீட்டுக்கு பிறகு, ஆளுநர் போன்ற முக்கியமான பதவியிலிருந்து ராய் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் நீதிமன்றங்களும் அவர் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதே போல மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் தபாஸ் டே கூறும் பொழுது, 'ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த ஆளுநர் பதவியை விட , ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கையாளாகவே ராய் செயல்படுவ தாக தெரிகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே மறுநாள் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஆளுநர் ராய், 'சிவில் யுத்தம் தொடர்பான கருத்தை நான் மேற்கோள் காட்டினேன்; அது என்னுடைய கருத்தல்ல'; 'இது புரியாத முட்டாள்கள் என்னைக் கேலி செய்கிறார்க ள்;' என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது போன்ற டிவிட்டர் சர்ச்சைகளில் ராய் சிக்குவது இது முதல் தடவை அல்ல. முன்னதாக ஜூலை 2015-ல், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவரும் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது; அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்' என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


