தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டர் விபத்து: முதல்வர் அலுவலகம் மறுப்பு
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2-ஆவது முறையாக ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியதாக வந்த செய்திக்கு அம்மாநில முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மாநிலத்தில் உள்ள ராய்கட் எனுமிடத்துக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேலே பறக்கும்போது அதன் இறக்கைகள் பட்னாவிஸின் தலையை நோக்கி சுழன்றதாகவும், அச்சமயத்தில் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி அவரை பத்திரமாக மீட்டுச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனை, மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பி குழப்பமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் 25-ம் தேதி, மகாராஷ்டிரத்தில் உள்ள லத்தூர் மாவட்டத்தின் நிலங்கா எனுமிடத்தில் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்து, அதிலிருந்து அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...