பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேரளாவில் பெண்களின் பாதுகாப்புக்காக வந்தாச்சு 'ஒரு நாள் வீடு'!

கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கென 'ஒரு நாள் வீடு' என்னும் சிறப்பு திட்டத்தினை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.   

News image
Updated On :6 ஜூலை 2017, 11:49 am

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கென 'ஒரு நாள் வீடு' என்னும் சிறப்பு திட்டத்தினை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.   

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஒவ்வொரு நாளும் தேர்வுகள் எழுதுவதற்காகவோ, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பதன் பொருட்டோ அல்லது கூட்டங்களில் பங்கேற்பதற்காகவோ எத்தனையோ பெண்கள் மாநில தலைநகரான திருவனந்தபுரம் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் குறுகிய கால அளவில் தங்கிச் செல்வதற்காக 'ஒரு நாள் வீடு' என்னும் திட்டம் கொண்டு வரப்படுகிறது.

பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் நல்ல உணவு ஆகியவற்றினை குறைந்த செலவில் வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

நகரின் மையத்தில் அமைந்துள்ள தாம்பனூரில் இருக்கும் கேரளா மாநில சாலை போக்குவரத்துக்கு கழக அலுவலகத்தன் ஏழாவது தளம் இதற்காக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக ரூ.30.56 லட்சம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது 

இந்த திட்டமானது மாநில அரசின் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மகளிர்  முன்னேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

இவ்வாறு ஷைலஜா தனது பேட்டியில் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.