மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தினால் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு: இந்திய ராணுவ தலைமைத் தளபதி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாகும் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.

Updated On :22 டிசம்பர் 2017, 7:45 pm

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாகும் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவம் (தெற்கு பிராந்தியப் பிரிவு), இந்திய விமானப்படை ஆகியவை சார்பில் ஹமேஷா விஜய் என்ற பெயரில் மிகப்பெரிய ஒத்திகை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதை பார்வையிட வந்த விபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். 
பாகிஸ்தான் முதலில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அதன்பிறகு, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடத்தை இந்தியா தெரிவிக்கும். பாகிஸ்தானுடனான உறவு மேம்பட வேண்டும் என்பதுதான் நமது நாட்டின் விருப்பமாகும். ஆனால் பாகிஸ்தானோ, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து பாகிஸ்தானுக்கு அமைதி மீது உண்மையில் விருப்பமில்லை என்பது தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீஸார் ஆகியோர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கை தொடரும் என்றார் ராவத்.
இதனிடையே, தார் பாலைவனத்தில் ராணுவமும், விமானப் படையும் கூட்டாக நடத்திய ஒத்திகையை ராவத் பார்வையிட்டார். எதிரி நாட்டின் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் திறன்கள் இந்திய ராணுவத்துக்கு உள்ளதா? என்று பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.