பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது: உபியில் விநோத சம்பவம்! 

உத்தரப் பிரதேசத்தில் கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது செய்யப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2017, 10:24 am

முஸாபார்நகர்: உத்தரப் பிரதேசத்தில் கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது செய்யப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாபார்நகர் மாவட்டம் காக்டா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று ஜோதி தனது கணவன் இல்லத்தில் இருந்து, ரூ.70000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிக் கொண்டு  வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.       

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஜோதியை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஜோதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏமாற்றுதல் மற்றும் திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.