நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சீன எல்லையில் ராணுவத்தினருடன் மோடி கொண்டாடிய தீபாவளி !

இந்திய சீன எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்  இந்தோ–திபெத்திய எல்லை படையினருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:50 am

DIN

புதுதில்லி: இந்திய சீன எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்  இந்தோ–திபெத்திய எல்லை படையினருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி கினோர். இங்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை மற்றும் ராணுவ படையினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடி வருகிறார்.

அங்குள்ள சோம்து கிராமத்தில் இந்தோ–திபெத்திய எல்லைப் படை போலீசாருக்கு பிரதமர் மோடி இனிப்பு வழங்கினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். சோம்து செல்லும் வழியில் பிரதமர் மோடி எதிர்பாராத நிகழ்வாக சாங்கோ கிராமத்தில் இறங்கினார். அங்குள்ள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கிராம மக்கள் பிரதமர் மோடியுடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர். அப்போது பிரதமர் மோடி கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பிரதமர் பதவி ஏற்றதற்கு பிறகு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவத்தினருடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார்.

முதன் முறையாக கடந்த 2014–ம் ஆண்டு, பிரதமராக தனது முதல் தீபாவளியை சியாச்சின் பனி மலைப்  பகுதியில்  ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.