புது தில்லி: ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகம் கூறியுள்ளது.
மும்பையில் கடற்கரையோரம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹாஜி தர்காவின் முக்கியப் பகுதிக்குள் பெண்கள் நுழைய கடந்த 2012ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஹாஜி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஹாஜி தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது தர்கா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஹாஜி தர்காவின் உள்பகுதிக்குச் செல்ல பெண்களுக்கும் அனுமதி வழங்குவதாகவும், இதனை நடைமுறைப்படுத்த வசதியாக தர்கா உள்கட்டமைப்பில் மாற்றம் செய்ய 4 வார கால அவகாசம் கோரப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

