பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

செப்டம்பருக்குள் ரூ.4 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்துவேன்: விஜய் மல்லையா உறுதி

இந்திய வங்கிகளிடம் தான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்திவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :30 மார்ச் 2016, 7:22 am

புது தில்லி: இந்திய வங்கிகளிடம் தான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்திவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

இந்திய வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல், இந்தியாவை விட்டு வெளியேறினார் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா.

இது குறித்து வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, விஜய் மல்லையாவின் வழக்குரைஞர் வைத்தியநாதன், நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், வங்கிகளிடம் பெற்றுள்ள கடனில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 4 ஆயிரம் கோடியை திரும்ப செலுத்துவதாக விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

மேலும், ஜி.இ. நிறுவனத்துக்கு எதிராக தான் தொடர்ந்துள்ள வழக்கில் வெற்றி பெற்றால் மேலும் ரூ.2 ஆயிரம் கோடியையும் செப்டம்பருக்குள் செலுத்தத் தயார் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கைக் குறித்து வங்கிகளின் தொழில் கூட்டமைப்பு இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.