வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சட்டச் சிக்கலில் உத்தரகண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை

உத்தரகண்ட் மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நைனிடால் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

நைனிடால்: உத்தரகண்ட் மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நைனிடால் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத்துக்கு எதிராக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து, மாநில சட்டப்பேரவையில் ஹரீஷ் ராவத் திங்கள்கிழமை (மார்ச் 28), தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கே.கே.பால் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரீஷ் ராவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நோக்கில், அவர்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ரகசிய விடியோ சனிக்கிழமை வெளியானது. இதைத் தொடர்ந்து, உத்தரகண்டில் அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை அங்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹரீஷ் ராவத், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி யு.சி.தயானி, "உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை ஹரீஷ் ராவத் வியாழக்கிழமை (மார்ச் 31) நிரூபிக்க வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் பங்கேற்கலாம்' என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி வி.கே.பிசித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "உத்தரகண்ட் பேரவையில் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, வரும் வியாழக்கிழமை (ஏப்.7) வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை (ஏப்.6) மீண்டும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தின்போது, "குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேர் புதன்கிழமை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.