வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குல்பர்க் சொசைட்டி வழக்கு: ஜூன் 17-க்கு விசாரணை ஒத்திவைப்பு

குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 4-வது முறையாக ஜூன் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2016, 9:22 am

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 4-வது முறையாக ஜூன் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையம் அருகே கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சபர்மதி ரயிலில் எஸ்-7 பெட்டி, ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், கரசேவகர்கள் 58 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது, ஆமதாபாத் அருகே உள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் சுமார் 400 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களில் 6 பேர் விசாரணையின்போதே உயிரிழந்து விட்டனர்.

இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதலில் இவ்வழக்கில் தண்டனை விவரம் 6-ம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தண்டனை விவரத்தை 9-ம் தேதி, 11-ம் தேதி, 13-ம் தேதி என மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டன. இப்போது, 4-வது முறையாக வரும் 17-ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.