தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2-ம் வகை நீரழிவு நோய்: ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது சிஎஸ்ஐஆர்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இரண்டாவது வகை நீரழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2016, 3:10 pm

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இரண்டாவது வகை நீரழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

பிஜிஆர்-34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனமும் லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர்  நிறுவனமான மருத்துவ மற்றும் வாசனைப் தாவரங்களளுக்கான மத்திய நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த மருந்தை கோழிக்கோட்டில் இன்று அறிமுகம் செய்துவைத்து முதன்மை விஞ்ஞானி  ஏகேஎஸ் ரவாத் பேசியதாவது:

இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமானோர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோய்க்காக இதுவரை எவ்வித பயனுள்ள தீர்வும் காணப்படவில்லை.

மருத்துவ மற்றும் வாசனைப் தாவரங்களளுக்கான மத்திய நிறுவனம்,தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து இரண்டாம் வரை நீரழிவுக்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து பயனுள்ளது, பாதுப்பானது. மேலும், நோயை கட்டுப்படுத்துவதில் நோயாளிக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். தற்போதைய நீரழிவு நோய்க்கான மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் சிஎஸ்ஐஆர் அறிமுகப்படுத்தியுள்ள மருந்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு பக்கவிளைவுகளை குறைக்கும் என்றார்.

தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி வி.ராவ் கூறுகையில், இந்த மருந்து இன்சூலின் சுரப்பதை அதிகரிக்கும் என்றார்.

இந்த புதிய மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கு ஏஐஎம்ஐஎல் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.