பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குஜராத்: செல்போனில் கூட்டாக காப்பியடித்த 51 மாணவர்கள் மீது வழக்கு

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில், செல்போன் வைத்து கூட்டாக காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :4 ஏப்ரல் 2016, 12:23 pm

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில், செல்போன் வைத்து கூட்டாக காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சௌராஷ்டிரா பல்கலை சார்பில் 51 கல்லூரி மாணவர்கள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில், மாணவர்கள் செல்போன் வைத்து காப்பியடித்த விடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடியோவில், வெளியில் இருந்து ஒருவர் செல்போன் மூலமாக வினாக்களுக்கான விடைகளைச் சொல்ல சொல்ல, தேர்வு மையத்தில் இருந்த மாணவர்கள் விடையை எழுதிக் கொண்டிருந்தனர்.

இப்படி செல்போன் உதவியோடு தேர்வு எழுதிய 51 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலையின் துணை வேந்தர் பிரதாப் சின் சௌஹான் கூறுகையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில், முறையாக தேர்வு நடப்பதை உறுதி செய்யாத கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.