ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது: லாலு பிரசாத்

பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று கூறிய பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

IANS

பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று கூறிய பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதியம், தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிய லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அமித் ஷா, அனைத்து பிகார் மக்களையும், இந்துக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் என அனைவரையும் அவமதித்துவிட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றார் லாலு.

மேலும், பிகார் தேர்தல் ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இல்லை. இந்தியா தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாட. இன்னும் ஒன்று, பாஜக ஒன்றும் இந்தியாவும் இல்லை, பிகார் ஒன்றும் பாகஸ்தானுமில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.