பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு பாதுகாப்பு தகவல்களை அளித்ததாக கூறி, பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர் உள்ளிட்ட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் ராஜ்யோரி மாவட்டத்தைச் சேர்ந்த கபாய்துல்லா கான் என்ற மாஸ்டர் ராஜா (44) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் அப்துல் ரஷீத் ஆகியோர் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளாதக காவல் துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறினார்.
பாகிஸ்தானுக்காக தகவல்களை சேகரித்து வந்த மாஸ்டர் ராஜாவுக்கு, எல்லைப் பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரஷீத் தொடர்ந்து தகவல்களை அளித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் தில்லி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
அதன்படி வியாழக்கிழமை, ஜம்முவிலிருந்து போபாலுக்கு சென்ற மாஸ்டர் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல் பேரில் பி.எஸ்.எப். வீரர் அப்துல் ரஷீத்தும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாஸ்டர் ராஜாவிடமிருந்து இந்தியாவின் பாதுகாப்பு குறித்த பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொல்கத்தாவில் 3 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது
பாகிஸ்தான் நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக கொல்கத்தாவில் மூன்று பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். இர்ஷத் அன்சாரி, அஸ்பக் அன்சாரி, முகமது ஜஹாங்கீர் ஆகிய மூவரையும் கொல்கத்தா ஈக்பால்பூர் பகுதியில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் ஐந்து லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், பல சட்டவிரோத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கொல்கத்தா சிறப்புப் படை பிரிவின் துணை ஆணையர் அகிலேஷ் சாருவேதி கூறினார்.
மேலும், அதில் ஒருவரிடமிருந்து ராணுவத்துக்காக போர்கப்பல்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் அமைவிடம் தொடர்பான வரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.
இந்தியர்களான மூவரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி முகமது இசாஷ்க்கும் தொடர்பு உள்ளதாக என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

