வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

'வெளியே போ ' என பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் கூறிய ஹரியாணா அமைச்சர்

ஹரியாணாவில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அனீல் விஜ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

News image
Updated On :27 நவம்பர் 2015, 3:06 pm

ஹரியாணா மாநிலத்தின் பதிகாபாத் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனீல் விஜ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார். எனினும், அந்த அதிகாரி வெளியேற மறுத்ததால் அமைச்சர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

சண்டிகரிலிருந்து சுமார் 225 கிமீ. தொலைவில் உள்ள பகிதாபாத் மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனீல் விஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்  சங்கீதா கலையாவிடம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து மது கடத்தப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சங்கீதா, இதுவரை 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

அவரது பதிலில் திருப்தி அடையாத அமைச்சர், மேலும் விளக்கம் கேட்டதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனீல், கண்காணிப்பாளர் சங்கீதாவை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

 அதற்கு சங்கீதா 'ஏன்?' `நான் எதற்காக வெளியேற வேண்டும்?' என்றதோடு, கூட்டத்திலிருந்து வெளியேறாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார். இதில் கடுப்படைந்த அமைச்சர் அனீல், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கீதா மாவட்டக் கண்காணிப்பாளராக தொடரும் நிலையில், நான் பகிதாபாத் மாவட்டத்துக்கே வர மாட்டேன் என்றார். மேலும், இதுகுறித்து முதல்வரிடம் முறையிட போவதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.