வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லி சுற்றுலா பொருள்காட்சியில் சக்கைபோடு போடும் மேகி

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச பொருள்காட்சியில், மேகி நூடூல்ஸ் விற்பனை சக்கைபோடு போடுகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2015, 12:36 pm

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச பொருள்காட்சியில் மேகி நூடூல்ஸ் விற்பனை சக்கைபோடு போடுகிறது.

ஆறு மாத தடை விலக்கப்பட்டப் பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள நெஸ்லே நிறுவனத்தின் மேகி, மீண்டும் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருள்காட்சியின், உணவு சாலைக்கு வரும் பெரும்பாலனவர்கள் மேகி நூடூல்ஸ் ரூசிக்க தவறுவதில்லை.

பொருள்காட்சியில் முதன்முறையாக பங்கேற்றுள்ள மேகி உணவுசாலையில் நாள்தோறும் 500 முதல் 600 தட்டுகள் நூடூல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது என்றார் மேகி விற்பனை பிரிவு அதிகாரி சோபிகித் சர்மா.

ஆறு மாத தடைக்குப் பிறகு மேகி விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் மேகி ரூசிக்கு அடிமையானவர்களுக்கு இது அதிக காலம். சிறுவர்கள், இளைஞர்களை விட நடுத்தர வயதினரும், வயதானவர்களும் அதிக அளவில் மேகியை வாங்கி செல்கின்றனர். மக்கள் மேகி வரவுக்காக ஏங்கி நின்றுள்ளனர் என்றார் சர்மா.

மேகி நூடூல்ஸ் விற்பனையை ஒப்பிடும் போது பிற உணவுசாலைகளில் விற்பனை 2 சததுக்கும் குறைவாக இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர். தோசை, பேல்பூரி, பிஸா போன்ற பல உணவுப் பொருள்கள் விற்பனைக்கு இருந்தாலும், அனைவற்றையும் மேகி பின்னுக்கு தள்ளிவிட்டது.

அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததாக கூறி, மேகி நூடூல்ஸ் விற்பனை கடந்த மே மாதம் தடை செய்யப்பட்டது. பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்கு பின்னர் நெஸ்லே நிறுவனம் மேகி விற்பனையை சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.