திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

விலை உயர்வு: 72% மக்கள் தக்காளியை கைவிட்டனர்

நாள்தோறும் அதிகரித்து வரும் விலையை சமாளிக்கும் வகையில், 72% நடுத்தர வர்கத்தினர் தங்கள் அன்றாட சமையலலிருந்து தக்காளியை நீக்கிவிட்டனர்.

News image
Updated On :20 நவம்பர் 2015, 10:13 am

நாள்தோறும் அதிகரித்து வரும் விலையை சமாளிக்கும் வகையில், 72% நடுத்தர வர்கத்தினர் தங்கள் அன்றாட சமையலலிருந்து தக்காளியை நீக்கிவிட்டனர்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் காய்கறி விலை குறித்து அசோசாம் நாடு முழுவதும் உள்ள பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரில் உள்ள 1000 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 72 சதம் பேர், தங்களது குடும்பத்துக்கான காய்கறி பட்ஜெட் அதிகரித்து வருவதால்,  தக்காளியை தங்கள் அன்றாட உணவுகளில் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக கூறினர்.

தில்லியில், கடந்த வாரம் கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ. 65க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தற்போது கிலோ ரூ. 55 முதல் 80 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தக்காளி விலை உயர்வு, ரெடிமேடாக விற்கப்படும் தக்காளி சாறு (puree) மற்றும் 'கெட்சப்' பக்கம் மக்களின் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த தக்காளி சாறு வகைகளின் தேவை கடந்த வாரத்தில் மட்டும் 20 முதல் 25 சதம் வரை அதிகரித்துள்ளதாக, அசோசாம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறினார்.

காயற்கறி விலை மட்டுமல்லாது, சமையலுக்கு அத்தியாவசியமான இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய பொருள்களின் விலையும் (ரூ. 160 முதல் ரூ. 200 வரை) கணிசமாக உயர்ந்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதவும் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும், இஞ்சி பூண்டு விழுதுகளின் தேவையை அதிகரித்துள்ளது.

தக்காளி, இஞ்சி, பூண்டு போன்றவற்றின் ரெடிமேட் தயாரிப்புகள் தற்போது நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக காட்சி அளிப்பதாக அசோசாம் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.