மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மூத்த பாஜக தலைவர்களின் கருத்துகள் கட்சிக்குள்ளேயே விவாதிக்க வேண்டும்: வெங்கைய நாயுடு

பிகார் தோல்விக்கு பின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.கூறினார்

News image
Updated On :13 நவம்பர் 2015, 8:14 am

பிகார் தோல்விக்கு பின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப்பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.

பிகார் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சக்கு ஏற்பட்ட தோல்விக்கு பின், அறிக்கை வெளியிட்ட மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர், தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேர்தலில் முன்னணியில் இருந்து பிரசாரம் செய்தவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இன்று பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, மூத்த தலவைர்கள் தங்கள் கருத்துகளை கட்சி கூட்டங்களில் மட்டுமே தெரிவித்த வேண்டும். அதை பொதுவெளியில் விவாவதிப்பது நல்லதல்ல என்றார்.

கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் எதிர்கொண்ட பாஜக, இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. மேலும், அஸ்ஸாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் பிகார் தேர்லில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூற கூடாது என்றார் நாயுடு.

கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபோது எந்த தனிப்பட்ட நபரும் பொறுப்பேற்கவில்லை என்ற நாயுடு 2004 தேர்தலில் தானும், 2009 தேர்தலில் அத்வானியும் கட்சியை வழிநடத்தியதாக குறிப்பிட்டார்.

பாஜகவின் வளர்ச்சிக்கு அத்வானி அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது என்ற நாயுடு, தற்போது இந்தியாவின் மிக பிரபல தலைவராக மோடி இருக்கிறார் என்றார்.

ஒவ்வொரு பாஜக உறுப்பினரும், பாஜக அனுதாபிகளும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும் என்றார் நாயுடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.