ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில வளர்ச்சிக்காக ரூ. 80 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.
ஷர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி இதை அறிவித்தப் போது மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இதன் மூலம் 2014-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டோர், விவசாயிகள், வணிகர்கள், சுற்றுலாத் துறைக்கு நிதி உதவி அளிக்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும் என்றார் மோடி.
தில்லி வழங்கும் நிதி மட்டுமல்ல, தில்லியின் இதயமும் காஷ்மீர் மக்களுக்காக இருக்கிறது என்றார் பிரதமர்.
மேலும், காஷ்மீர் நகரத்தை சுற்றுலாவின் கனவு நகரமாக்க விரும்புவதாகும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் காஷ்மீர் வெகு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரத்துக்காக ரத்தம் சிந்தியோரை நினைத்து வேதனைப் படுகிறேன். கொஞ்சம் பணம் இருந்தால் காஷ்மீர் செல்லலாம் என்ற மக்களின் பழைய எண்ணங்கள் நிறைவேற அரசு பாடுபடும்.
ஜம்மு- ஸ்ரீநகர் சாலை ரூ. 34,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதன் மூலம் பயண நேரம் 12 நேரத்திலிருந்து 3.5 மணி நேரமாக குறையும்.
காஷ்மீர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது. சுஃபி (Sufism) பிறந்த இடம் இது. அது எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது என்ற மோடி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


