வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சரத் பவார் புத்தகம்: சுதந்திரமாக சிந்திப்போரை சோனியா விரும்பவில்லை என தகவல்

சுதந்திரமாக சிந்திப்போரை சோனியா காந்தி விரும்புவதில்லை. அதனால் தான் 1991 ஆம் ஆண்டு பவாருக்கு பதில் நரசிம்ம ராவ் பிரதமராக்கப்பட்டார் என

News image
Updated On :11 டிசம்பர் 2015, 10:33 am

சுதந்திரமாக சிந்திப்போரை சோனியா காந்தி விரும்புவதில்லை. அதனால் தான் 1991 ஆம் ஆண்டு பவாருக்கு பதில் நரசிம்ம ராவ் பிரதமராக்கப்பட்டார் என சரத் பவார் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை 75 பிறந்த நாளை கொண்டாடும் சரத் பவாருக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று புது தில்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது 'எனது வாழ்க்கை- அடிமட்ட தொண்டர் முதல் ஆட்சி அதிகாரம் வரை' என்ற தலைப்பில் பவார் எழுதியுள்ள புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில், கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் திடீர் மரணத்திற்கு பிறகு, உடல் நலம் குன்றியதால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக்கப்பட்டார்.

சோனியாவின் விசுவாசிகளான ஆர்.கே. தவன், வி.ஜார்ஜ், அர்ஜூன்சிங் உள்ளிட்டோர் என்னை பின்னுக்கு தள்ளி நரசிம்ம ராவை பிரதமராக்கிவிட்டனர்  என குறிப்பிட்டுள்ளார் பவார்.

நான் பிரதமரானால் நீண்டநாட்களுக்கு பதவியில் நீடிப்பேன் என்பதாலும், காந்தியின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் சோனியாவின் விசுவாசிகள் தடுத்துவிட்டனர். மேலும் சுதந்திரமாக சிந்திக்கும் என்னைப் போன்றோரை சோனியா விரும்பவில்லை என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் பவாரைவிட நரசிம்ம ராவ் 35 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பவாருக்கும் நரசிம்ம ராவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்திய இந்திரா காந்தியின் முதன்மை செயலராக இருந்த பி.சி.அலெக்ஸாண்டர், பவாருக்கு முக்கியமான துறையை பெற்று தந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு அத்தியாத்தில் 1999 ஆம் ஆண்டு வாஜபேயி அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதவி இழந்த போது, சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் என்ன பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்தால் தான் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்காலம் இருக்கும் என்று கூறினேன். கடைசி நிமிஷத்தில் 5 எம்.பி.க்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்த்து வாக்களித்ததால் வாஜபேயி அரசு கவிழ்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.