ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விஜய் சௌத்ரி: பிகாரின் புதிய சபாநாயகராக தேர்வு

பிகார் சட்டப் பேரவை தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் சௌத்ரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 10:07 am

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிகார் சட்டப் பேரவை தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் சௌத்ரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகாகூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் பதிவியேற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில், ஐக்கிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் நிதிஷ் குமாரின் நெருங்கிய தோழருமான விஜய் சௌத்ரி, பேரவைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், எதிர்கட்சித் தலைவர் பிரேம் குமார், முன்னாள் முதல்வர் ராம் மாஞ்சி, காங்கிரஸ் அமைச்சர் அசோக் சௌத்ரி, பாஜகவின் சஞ்சய் உள்ளிட்ட 11 பேர் முன்மொழிந்தனர்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் சௌத்ரியின் மகனான விஜய் சௌத்ரி முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருடன் நெருக்கமானதால் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.

பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட சௌத்ரி, கடந்த 2010 அமைச்சரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.