தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிகழ்ச்சிகளை கைபேசியில் (செல்போன்) பார்க்கும் வசதி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் (பணியாளர்) பிரிகேடியர் வி.ஏ.எம். ஹுசைன் தெரிவித்தார்.
"தினமணி' இதழுக்கு அவர் அளித்த பேட்டி:
பிரசார் பாரதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்படும். அதன்படி
தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இணையான செய்திகள் நிகழ்ச்சிகளை அரசுத் தொலைக்காட்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஒரு கட்டமாக யூ டியூப், மொபைல் போன் ஆகியவற்றிலும் காண நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறையாக பார்வையாளர்கள் மதிப்பீட்டுக் குழு, நிகழ்ச்சி ஆலோசனைக் குழு என்று இரு குழுக்களை அமைத்துள்ளோம். விரைவில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டவுடன் பொதிகையின் நிகழ்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் வரும்.
பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும்.
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் வானொலி நிலையங்களில் கொடைக்கானல், காரைக்கால் ஆகியவை உள்ளன. இந்நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களை இடம்பெறச் செய்வது அவசியம்.
டிஜிட்டல் ரேடியோ: அகில இந்திய வானொலியை டிஜிட்டல்மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். "டிஜிட்டல் ரேடியோ' ஒலிபரப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அரசு வானொலியைத் தனியார் பண்பலை (எஃப்எம்) போல தெள்ளத் தெளிவாகக் கேட்கலாம்.
இந்தப் புதிய மாற்றங்கள் மூலம் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி வருங்காலத்தில் மக்களைக் கவரும்.
மக்கள் பார்க்கும் தரமான நிகழ்ச்சிகளைத் தூர்தர்ஷன் தயாரித்து வருகிறது.
வர்த்தக ரீதியில் இந்நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதில்லை. தேசிய ஒருமைப்பாடு, சமுக நீதி, வேளாண்மை, ஊரக சீரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் செய்யப்படுகின்றன என்றார் ஹுசைன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

