நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வலிமையான உடலைப் பெற உதவும் சூரணம்

வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கசகசா பாதாம் பருப்புச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள். 

News image
வலிமையான உடலைப் பெற உதவும் சூரணம்
Updated On :27 ஜனவரி 2024, 5:54 pm

கோவை பாலா

வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கசகசா பாதாம் பருப்புச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

கசகசா                             -    100  கிராம்

முந்திரிப் பருப்பு          -     100 கிராம்

பாதாம் பருப்பு             -     100 கிராம்

செய்முறை

முதலில் கசகசா, முந்திரிப் பருப்பு  மற்றும் பாதாம் பருப்பு இவை மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

பயன்கள்
இந்த சூரணம் உடலை வலுப்பெறுவதற்கு உதவும்  அருமருந்தாகும். வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் வெறும் வாயில் போட்டு சப்பி சாப்பிடலாம் அல்லது சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.