டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி

முதலில் அரிசியை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:07 am

கோவை பாலா

 
நெருஞ்சில் கஞ்சி 

தேவையான பொருட்கள்

நொய்யரிசி - 100 கிராம் 
சிறுநெருஞ்சில் - 5 கிராம் 
மிளகு - 5 கிராம் 
பூண்டு - ஒரு பல் 
சீரகம் - கால் ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை 

செய்முறை : முதலில் அரிசியை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பின்பு சிறு நெருஞ்சில் , மிளகு , பூண்டு,  சீரகம் போன்றவற்றை நன்றாக  சிதைத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து சுத்தமான காட்டன் துணியில் முடிந்து நோய் அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சாதத்தை குழைய வைத்து பின்னர் நெருஞ்சில் முடிச்சு போட்ட துணியை எடுத்து விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும் .

பயன்கள் : இந்த கஞ்சியை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் செயலிழந்த சிறுநீரகம் சீராக இயங்க உதவும். மேலும் சிறுநீரக கற்களையும் கரைக்கும்.இது சித்தர்களின் அற்புதமான முறையாகும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.