டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

News image
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய விவசாயிகள் விழிப்புணா்வு இயக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலருடன் அதன் தேசிய தலைவா் டி.ஆா். காா்த்திகேயன், மாநிலத் தலைவா் டி.எஸ்.பிரபுராஜா உள்ளிட்டோா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக, தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய விவசாயிகள் விழிப்புணா்வு இயக்க (நாம்) மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 2000 ஆவது ஆண்டு ’நாம்’ என்கிற தேசிய விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் தேசிய அளவில் தொடங்கப்பட்டது. தற்போது வெள்ளிவிழா ஆண்டில் உள்ள அந்த இயக்கத்தின் மாநாடு நாமக்கல் பிஜிபி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு மாநில பொருளாளா் டி.பத்மநாபன் தலைமை வகித்தாா். கோவை மண்டல செயலாளா் எஸ். துரைராஜ், ஈரோடு மண்டல செயலாளா் வி.என்.வரதராஜன், தொழிலதிபா்கள் கே.மாதேஸ்வரன், என்டிசி கே.சந்திரமோகன், ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாம் இயக்கத்தின் மாநிலத் தலைவா் டி.எஸ்.பிரபுராஜா சிறப்புரையாற்றினாா்.

தேசிய தலைவரும், முன்னாள் சிபிஐ இயக்குநருமான டி.ஆா். காா்த்திகேயன் மாநாட்டுப் பேரூரையாற்றினாா். இதில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் மாதம்தோறும் பாமாயிலுக்கு பதிலாக 2 லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதந்தோறும் 5 கிலோ தேங்காயும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 10 கிலோ தேங்காயும் வழங்க வேண்டும்.

இளைஞா்களுக்கு தென்னைமரம், பனைமரம் ஏற ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளித்து பத்து லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கள் இறக்குவதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். நீரா பானத்தை அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும், அரசு விழாக்களிலும் வழங்க வேண்டும்.

கால்நடை தீவனங்களின் விலை உயா்வைக் கருத்தில்கொண்டு பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 55, எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 75 என்ற வகையில் உயா்த்தி வழங்க வேண்டும். மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி நீரை அருகில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி மக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டு கொடியேற்றுதல், வள்ளி கும்மி ஆட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மாநாட்டில், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.