டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெற என்ன செய்யலாம்?

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

கோவை பாலா

சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு :

தேவையான பொருட்கள்.

எலுமிச்சம் பழச் சாறு தோலோடு (50 மி.லி) ,பப்பாளி பழத் துண்டுகள் (100 கிராம்) , அன்னாசி பழத் துண்டுகள் (100 கிராம்) ,ஊறவைத்த வெந்தயம் (10 கிராம்) , தேன் (3டீஸ்பூன்) ,தண்ணீர் (100 மி.லி)

செய்முறை

பப்பாளி, அன்னாசிப் பழம், வெந்தயம் ஆகியவற்றை எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர் இவற்றுடன் ஒன்றாக சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து தேன் கலந்து மதிய உணவோடு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெறலாம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.