உடல் பலம் அதிகரிக்க
வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து


வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
தீர்வு - அரசாணிக்காய்(100 கிராம்) தோலுடன் நன்றாக துருவி அதனுடன் தேங்காய் (100 கிராம் துருவியது) , முருங்கை விதைப் பருப்பு (10) அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து காலை மாலை என இரு வேளையும் ஜூஸாக குடித்து வரலாம். மதியம் வேளை உணவில் அரசாணிக்காயை தோலுடன் துருவி நீராவியில் வேகவைத்து அதனுடன் தேங்காய் நிறையத் துருவிப் போட்டு பொறியலாக செய்து சாப்பிட்டு வரவும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...