தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகின் அதிக எடை கொண்ட மனிதருக்கு சிகிச்சை!

மெக்சிகோ நகரில் வாழ்ந்து வரும் ஜுன் ஃபெட்ரோ என்பவர் தான் உலகின் அதிக எடையுள்ள

News image
Updated On :17 நவம்பர் 2016, 7:28 am

மெக்ஸிகோ நகரில் வாழ்ந்து வரும் ஜுன் ஃபெட்ரோ என்பவர் தான் உலகின் அதிக எடையுள்ள மனிதர்  ஆவார்.தற்போது இவருடைய வயது 32, எடை 500 கிலோ. கடந்த ஆறு வருடங்களாக உடல் பருமன் பிரச்னையால் படுக்கையிலிருந்து எழ முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு, எடை குறைப்பு சிகிச்சை தொடங்கியது. ஜுனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பிரத்யேகமாக ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தனர் மருத்துவ குழுவினர். மத்திய மெக்ஸிகோவில் இருக்கும் அவருடைய சொந்த ஊரான அகாஸ்கலண்டிஸிலிருந்து மேற்கு மெக்ஸிகோவில் உள்ள நகரான கவுடலஜாரா எனும் ஊரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜுன். 

அவரை அங்கு கொண்டு செல்வதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது என்றனர் மருத்துவர்கள். ஜுன் தன்னுடைய மருத்துவ சிகிச்சையைப் பற்றிக் கூறும்போது இனி என்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்க முடிவெடுத்துள்ளேன், புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, எனக்கு உதவி செய்யும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அவருடைய தற்போதைய நிலை உண்மையில் கவலைக்கு இடமாகத் தான் உள்ளது. ஜுன் இளம் வயதிலிருந்தே உடல் எடை அதிகமான சிறுவனாக இருந்துவந்தார். 15 வயதில் 200 கிலோ எடையில் இருந்த அவரின் வயது அதிகமாகி வருகையில் உடல் எடையும் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் கட்டுக்கு அடங்காத அளவுக்கு அவரின் உடல் எடை அதிகரித்துவிட்டது. அதுவும் கடந்த ஆறு வருடத்தில் அவரால் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளக் கூட முடியாத அளவுக்கு உடல் பருமனாகிவிட்டதால் தற்போது இறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால் தான் உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தனக்கோ தன்னுடைய குடும்பத்தாருக்கோ இதை எப்படி குணமாக்குவது என்றே தெரிந்திருக்கவில்லை என்று வருத்தத்துடன் அவர் கூறினார்.

Story image

ஜுனின் பிரச்னையை சரி செய்ய முடிவெடுத்த டாக்டர் ஜோஸ் அண்டொனியோ காஸ்டநேடா தன்னுடைய குழுவினருடன் முதலில் ஜுனை அவர் வீட்டில் சந்தித்தார். அதன் பின்னரே அவரை உடனடியாக மருத்துவ வசதிகள் நிறைந்த க்ளினிக்குக்கு மாற்ற முடிவு செய்தார். டாக்டரும் அவருடைய குழுவினரும் இதுவரை உடல் பருமன் பிரச்னையில் அவதியுற்ற 8000 நபர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக உடல் எடை உள்ளிட்டு ஹைபோ தைராய்டிஸம், ஹைபர் டென்ஷன், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் அதிகமான ரத்த க்ளூகோஸ் அளவு என பல சிக்கல்களும் ஜுனுக்கு இருந்தது. எனவே அவருக்கான சிகிச்சை ஆறு மாதம் வரை நீடிக்கும். சிகிச்சையில் முக்கியமாக அவருடைய உடல் எடை குறைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் அதே சமயத்தில் மற்ற நோய்களுக்கும் மருத்துவம் செய்யப்படும். தேவைப்படும் எனில் அறுவை சிகிச்சை செய்யலாம் இது நிச்சயம் அவருக்கான நிரந்தர தீர்வாக இருக்கும் என்றனர் மருத்துவர்கள்.

2015 -ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 32.4 சதவிகித மெக்ஸிக ஆண்கள் உடல் பருமன் பிரச்னையில் உள்ளனர். இதுவே அமெரிக்காவில் 35.3 சதவிகிதமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.