உடல் சூட்டைத் தணிக்க உதவும் அருமருந்து
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் பிண்ணாக்குக் கீரை நெல்லிக்காய்ச் சூரணத்தைப் பயன்படுத்தி வர நல்ல பலனளிக்கும்.


உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் பிண்ணாக்குக் கீரை நெல்லிக்காய்ச் சூரணத்தைப் பயன்படுத்தி வர நல்ல பலனளிக்கும்.
தேவையான பொருள்கள்
பிண்ணாக்குக் கீரைச் சாறு - 300 மி.லி
நெல்லிக்காய் (கொட்டை நீக்கியது) - 10
சீரகம் - 15 கிராம்
செய்முறை
முதலில் பிண்ணாக்குக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சீரகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். அரைத்து எடுத்து வைத்துள்ள சாறுடன் நெல்லிக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கி ஊறவைக்கவும். நன்கு ஊறின பிறகு அதனை உலர வைக்கவும். உலர்ந்த பின்பு அதனை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் உடல் சூட்டைத் தணிக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவுப் பொடியை எடுத்துச் சாப்பிட்ட பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
-கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...