வயிறு உப்புசத்தைப் போக்க உதவும் சூரணம்
வயிறு உப்புசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஓமம் மிளகுச் சூரணத்தைப் பயன்படுத்தி பலனடையலாம்.


வயிறு உப்புசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஓமம் மிளகுச் சூரணத்தைப் பயன்படுத்தி பலனடையலாம்.
தேவையான பொருள்கள்
ஓமம் - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
பனைவெல்லம் - 100 கிராம்
செய்முறை
முதலில் ஓமம், மிளகு மற்றும் பனைவெல்லத்தை எடுத்து மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்தியப் பின்பு அதனை ஒன்றாகக் கலந்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் போன்றவற்றைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேலும் பேதியால் துன்பப்படும்பொழுது உடனடி நிவாரணத்தைக் கொடுக்க உதவும்.
மேற்கூறிய குறைபாட்டால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் இரண்டு வேளையும் உணவிற்குப் பின்பு நெல்லிக்காய் அளவு பொடியை எடுத்து அப்படியே வாயில் போட்டு உமிழ்நீருடன் சுவைத்து சாப்பிட்டு வரலாம். இல்லையென்றால் சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...