நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பேன், பொடுகுத் தொல்லையைப் போக்க இதைச் செய்யுங்கள்!

பேன், பொடுகுத் தொல்லை மட்டுமல்லாது மூலம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த சூரணம் அருமருந்தாக விளங்குகிறது. பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.

News image
Do this to get rid of lice and dandruff
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

கோவை பாலா

பேன், பொடுகுத் தொல்லை மட்டுமல்லாது மூலம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த சூரணம் அருமருந்தாக விளங்குகிறது. பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

பொடுதலைக் கீரை  ( நிழலில் உலர்த்தியது)   -     500 கிராம்

மிளகு                -      20 கிராம்

சீரகம்                 -      20  கிராம்

மஞ்சள் தூள்    -      10 கிராம்           

செய்முறை

முதலில் பொடுதலைக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்தியப் பின்பு அதனை நிழலில் நன்கு உலர வைக்கவும். மிளகு மற்றும் சீரகத்தைச் சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு நன்கு உலர்ந்த கீரையுடன் மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கி அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம் ஆகியவற்றை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேலும் பேன், பொடுகுத் தொல்லையை போக்க உதவும். வயிற்றுக் கோளாறுகளை நீக்க உதவும். மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடு நீரில் கலந்து சாப்பிட்டப் பின்பு குடித்து வரவும்.

மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 

FOOD CONSULTANCY  CENTER

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

Kovai Bala YouTube channel:
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.