நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உடலை வலுப்படுத்தி நீண்ட ஆயுளைத் தரும் அற்புத கசாயம் 

வயிறு சார்ந்த அனைத்து வகையான நோய்களைப் போக்கவும், நீண்ட ஆயுளைத் தரும் இந்த அற்புத கசாயத்தைப் பயன்படுத்தி பலனடையுங்கள்.

News image
உடலை வலுப்படுத்தி நீண்ட ஆயுளைத் தரும் அற்புத கசாயம்
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

கோவை பாலா

வயிறு சார்ந்த அனைத்து வகையான நோய்களைப் போக்கவும், நீண்ட ஆயுளையும் தரும் இந்த அற்புத கசாயத்தைப் பயன்படுத்தி பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்

கல்யாண முருங்கை இலை ( நிழலில் உலர்த்தியது)  -     500 கிராம்

மிளகு.                -    10 கிராம்

சீரகம்                 -     10  கிராம்

மஞ்சள் தூள்    -   அரை ஸ்பூன்           

செய்முறை

முதலில்  கல்யாண முருங்கை இலையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்தியப் பின்பு அதனை நிழலில் நன்கு உலர வைக்கவும்.
மிளகு மற்றும் சீரகத்தை சுத்தப் படுத்தி எடுத்துக் கொள்ளவும். பின்பு நன்கு உலர்ந்த கீரையுடன் மிளகு , சீரகம் மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கி அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் பலவிதமான நோய்களையும், வயிறு சார்ந்த அனைத்து வகையான நோய்களைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேலும் இந்த சூரணத்தை தொடர்ந்து உணவாகவோ அல்லது மருந்தாகவோ சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளும் உண்டாகும். மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடு நீரில் கலந்து சாப்பிட்டப் பின்பு குடித்து வரவும். கல்யாண இலை கீரையை உணவாக சாப்பிட முடியாதவர்கள்  இந்தச் சூரணத்தை மருந்தாகும் இயற்கை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.