திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

24.5.1976: இந்தியா - பாக். வர்த்தகத்தில் தனியார் துறையும் ஈடுபடலாம்

இந்தியா - பாக். வர்த்தகத்தில் தனியார் துறையும் ஈடுபடலாம்...

News image

24.5.1976 - Dinamani

Updated On :24 மே 2026, 4:06 am IST

புதுடில்லி. மே. 33 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில், வர்த்தகம் இரண்டு முடிவுகள் விளைவாக மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையிலான வாணிபத்தில் தனியார் துறையும் பங்கு பற்றும் என்பதும், கூட்டுக் கமிட்டி அமைப்பதென்பதும் புது முடிவுகள் ஆகும்.

ஒரு வாரத்துக்கு முன் இந்திய தூது கோஷ்டி வந்துவிட்டுப் போனதையடுத்து வெளியான கூட்டறிக்கையில் இரு நடவடிக்கைகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

தனியார்துறை ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் வாணிபத்தில் ஈடுபடலாம். ஆகையால், கூட்டுக்கமிட்டி உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

கூட்டுக் கமிட்டி 1975 ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் இயங்கிய முறையைப் பரிசீலிக்கும். அதனையடுத்து, கூடுமான விரைவில் அதன் முதல் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எப்படியும் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னமே கூட வேண்டும்.

ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்கு மேல் ஆனபோதிலும் அசல் பேரம் திருப்திகரமாக அமையவில்லை. ...

கடத்தப்பட்ட விமானம் வெடித்து 10 பணய கைதிகள் பலி

ஜம்போங்கா (பிலிப்பைன்ஸ்), மே. 23 - கடத்திச் செல்லப்பட்ட பிலிப்பைன்ஸ் விமானம் இன்று வெடித்ததில், குறைந்த பட்சம் 10 பணயக் கைதிகள் மாண்டனர்; 22 பேர் காயமுற்றனர். துருப்புகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 கடத்தல் பேர்வழிகள் மாண்டனர்.

துருப்புகள் கண்ணீர் புகைகுண்டுகளைக் கொண்டு விமானத்தைத் தாக்க முயன்றபோது, கடத்தல்காரர்களில் ஒருவர் ஒரு வெடிகுண்டை, விமான பைலட் இருக்கும் பகுதியில் வெடித்ததாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். முஸ்லீம் கடத்தல்காரர் 3 பேர் பிடிபட்டனர்.

விமானப் பயணிகளும், 6 சிப்பந்திகளும் பாதுகாப்பைத் தேடி ஓடினர்.

சென்ற வெள்ளியன்று 6 முஸ்லிம்கள் இந்த விமானத்தைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

பயணிகளில் பலர் காயமடைந் திருப்பதாகவும், அவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். ஆனால் குறைந்தபட்சம் 54 பணயக்கைதிகள் பத்திரமாயிருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

லிபியாவுக்குப் பறந்துசெல்ல ஒரு விமானமும், 3,75,000 யு.எஸ். டாலர் பணமும் தருமாறு இந்தக் கடத்தல்காரர்கள் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கோரிக்கைகள் பற்றி நடந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதும், இந்த விமானத்தைத் தாக்குவதென்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ...

Summary

Private Sector May Also Participate in India-Pakistan Trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.