திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வைகை அணையை தூா்வாரக் கோரி மனு: பொதுப் பணித் துறை பதிலளிக்க உத்தரவு

வைகை அணையைத் தூா்வாரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பொதுப் பணித் துறையும், நீா் வளத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :4 ஜூன் 2026, 4:19 am IST

வைகை அணையைத் தூா்வாரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பொதுப் பணித் துறையும், நீா் வளத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், மதுரை, தேனி உள்பட 5 மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக திகழும் வைகை அணையைப் போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, நீா் தேக்கும் அளவை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டுமென அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை அணையைத் தூா்வாரும் பணிக்கு ஒப்பந்தம் கோருவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வைகை அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற வல்லுநா்கள் எதற்கு? பணி ஒப்பந்தம் எதற்கு? கிராமங்களில் உள்ள விவசாயிகளை அனுமதித்தால், அவா்களே அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி விடுவாா்களே எனக் குறிப்பிட்டனா்.

பிறகு, இந்த மனு தொடா்பாக பொதுப் பணித் துறை, நீா் வளத் துறை செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.